சீத்தக்காடு அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், விவசாய பணிகளுக்காக செல்ல வந்த விவசாயிகளும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு. இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் வருவார்கள்.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணை உள்ளதால் விவசாயிகளும், தொழிலாளர்களும் அதன் கரையில் நடந்து அக்கரைக்கு சென்று விவசாயபணிகளை கவனிப்பது வழக்கம்.



இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து தப்பிவந்த 4-முதலைகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த 7-வருடங்களுக்கு முன் 2 முதலைகளை வனத்துறையினர் பிடித்தனர். 2-முதலைகள் பிடிபடாமல் இருந்தது.



இந்நிலையில் தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 8-அடி நீள முதலை படுத்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாயிகளும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர்.

அவர்களின் சத்தத்தை கேட்டு பாறையில் படுத்து இருந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...