கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் 5 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்

கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் முறையின்றி கண்ட இடங்களில் எறிந்துவிடுவதாலும் அவை மக்கும் தன்மை இல்லாததாலும் அவற்றால் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின்பேரில் இன்று உதவி நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் ராஜ வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக இருந்த சுமார் ரூ.3½  லட்சம் மதிப்புள்ள 5 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர். 



மேலும், வருகின்ற மார்ச் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலும், வரும் மே-1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஆகவே, தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...