86 வயதில் முதல் முதலாக புத்தகம் எழுதி வெளியிட்ட கோவை பெண்மணி

இந்த புத்தகத்தில் பாலம் சுந்தரேசன் ஆங்கிலத்தில் எழுதிய 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதுவதை வழக்கமாக கொண்ட இவர், தனது சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருக்கிறார்.


கோவை: கோவையைச் சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண் தனது 86 வயதில் Two Loves and Other Stories (இரண்டு காதலும் பிற கதைகளும்) என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தை மாலை 7 மணி அளவில் அண்ணா சாலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் வெளியிட்டார்.



இந்த புத்தகத்தை 'கல்வி துணை' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் வி.சிவசுவாமி பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தில் பாலம் சுந்தரேசன் ஆங்கிலத்தில் எழுதிய 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதுவதை வழக்கமாக கொண்ட இவர், தனது சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருக்கிறார்.



கதம்பம் என்ற வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி கொண்டுள்ளார். இப்போது அவரின் கதைகள் புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.



இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் அவ்வகையில் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணின் பாணியைப் போலவே இருக்கும். கருட பிரகாஷன் என்ற வட இந்தியாவைச் சேர்ந்த பதிப்பகத்தால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...