மூலனூரில் அரசுப்பள்ளி மற்றும் கோவில் புனரமைக்கப்பட்டு அரசிடம் ஒப்படைப்பு

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு அமைச்சர் கயல்விழி நன்றி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் உள்ள ஓலபாளையம் அரசு பள்ளி மற்றும் குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்க பட்டு அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஓலபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அருள்மிகு குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் நிறுவனம் 35, லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அனிதா டெக்ஸ்டைல் நிறுவனங்களைப் போன்று தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.



இதுபோன்ற மக்கள் நலத்தட்ட பணிகளை அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வருவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...