உடுமலை பகுதியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திடீர் ஆய்வு

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பவானீஸ்வரி ஒன்பதாறில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


திருப்பூர்: உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனச்சரகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த வாகனங்களை சோதனை இடுவதற்கு எதுவாக ஒன்பதாறு சோதனைச் சாவடியில் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச் சாவடியும், சின்னாறு பகுதியில் வனத்துறை சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு நாள்தோறும் சுழற்சி முறையில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பவானீஸ்வரி ஒன்பதாறில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ. சுகுமாறன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். உடுமலை பகுதியில் போலீஸ் ஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...