முதல்வரிடம் பேசி எந்த பலனும் இல்லை - கோவையில் தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால் திட்டமிட்டபடி வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த போவதாக கோவையில் மின் நுகர்வோர் கூட்டமைப்பின அறிவித்தனர்.


கோவை: தமிழக முதல்வர், தொழில் கூடங்களில் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேசினால் முழுமையான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின் கட்டணம் உயர்வு குறித்து அறிக்கை பேசியிருந்தார். அவர் பேசியதில் எந்த பலனும் இல்லை. மின் கட்டண விவகாரத்தை தமிழக முதல்வர் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேச மறுக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்சம் தொழில் முனைவோர் கடனில் தத்தளிப்பதாக தெரிவித்தனர். தமிழகத்தில் சிறுகுறு தொழில் கூடங்கள் மற்றும் தொழில் முனைவோர் என பல லட்சம் பேர் உள்ளனர் என தெரிவித்த அவர்கள் கோவை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 1 லட்சத்தி 67 ஆயிரம் பேர் இருக்கின்றனர் எனவும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி சம்பளத்துடன் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழில் கூடங்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தி உள்ளது என்பதை சுட்டி காட்டிய அவர்கள் சிறுகுறு தொழில் அமைப்புகளை நசுக்கும் விதத்தில் தமிழக மின் வாரியம் செயல்படுவதாக விமர்சித்தனர்.

இதனை முறையாக தமிழக முதல்வர், தொழில் கூடங்களில் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேசினால் முழுமையான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர். மேலும் இந்த அரசு நேற்று ஒரு அரசாணை குறித்து பேசியதை குறிபிட்ட அவர்கள் அது ஏற்கனவே சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட அரசாணை தான் எனவும் இதற்கான முழு விபரம் என்பது மின் கட்டணம் உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

எங்களுடைய முதல் கட்ட கோரிக்கை இரட்டிப்பு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், நாங்கள் அமைத்த சோலார் மின் உற்பத்திக்கு கூடுதல் தொகை வசூலித்தது அதில் உள்ள குளறுபடி தீர்க்க எங்களுடைய தொழில் துறையினர் அழைத்து பேசவில்லை அதிலும் மின் கட்டணத்தில் வந்து பணம் கேட்கின்றனர் என்றனர்.

இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பியும் பல முறை தபால்களை அனுப்பியும் எந்த ஒரு அழைப்பும், அழைத்து பேசவில்லை என குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தொழில் துறை மின் கட்டளை உயர்வுவை திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அவர்கள் மூலமாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த போவதாக அறிவித்தனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...