கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை - மழைநீரில் மீன்பிடித்து இளைஞர்கள் மகிழ்ச்சி

செல்வசிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் சாலையில் வெள்ளம் ஆர்பரித்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தததன் காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே, கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது.



இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது.

மேலும், செட்டி வீதி அசோக் நகர் பகுதிகளில் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்துள்ளது. செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா, பொதுச்சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வம் மற்றும் அதிகாரிகள் நேற்றிரவு அங்கு ஆய்வு செய்தனர்.

செல்வசிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது.



இதனால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர் பகுதிக்குள் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



இன்னிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் வெள்ள நீரில் மீன் பிடித்தனர்.



இதனிடையே போதையில் இருந்த நபர் ஒருவர் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை என்ற பாடலையும், ஏமாற்றாதே ஏமாற்றாதே பாடலையும் பாடி கொண்டிருந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...