கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.



இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 



மேலும், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



மேலும், தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்..



இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...