கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் - கோவை காவல் துணை ஆணையர் அறிவுரை

ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் என கோவை காவல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்

கோவை பிபிஜி கல்லூரி வளாகத்தில், உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின், தனியார் கல்லூரி மாணவர் ராக்கிங் செய்து தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை.ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துகல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்வதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் ஒருவர் மீது வழக்கு பதிவாகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற தடையாக அமையும் என்பதால் கல்லூரி மாணவர்கள் இதுபோன்றுராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாகஉள்ளதாகவும் எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...