எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் பெயரில் மோசடி - கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

5 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்ததாக பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் எனக்கூறி 5 கோடி நிலம் மோசடி செய்ததாக கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எனக் கூறி 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த் மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத்தும் அனுமதிற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது. 2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

இதனால் எங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது இந்த நிலங்களுக்கு எந்த விதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர் பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. மணி கவுண்டர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...