உடுமலை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

பெரியபட்டி அருகே இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உணவகம் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்துவருபவர் வெள்ளசெட்டிபாளையத்தை சார்ந்த கார்த்திகேயன்.

இவர் பல்லடம் சாலையில் பெரியபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று சாலை ஒரத்தில் இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் வேதனையுடன் இருப்பதை கண்டு என்னசெய்வது என தெரியாமல் அதன் அருகிலேயே நீண்டநேரம் நாய்கள் கடித்திடாவாறு பாதுகாத்து நின்றார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவி இயக்குநர் கணேஸ்ராம் அவர்களுக்கு தகவல் கொடுக்க உடனடியாக செயல்பட்ட அவர் மயிலை மீட்க சம்பவ இடத்திற்கு வனத்துறையினரை அனுப்பினர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு சிகிச்சைகாக எடுத்து சென்றனர்.

அடிபட்டுகிடந்த மயிலுக்கு நாய் உள்ளிட்ட மிருகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து நின்ற கார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்த உடன் விரைந்துவந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...