பல்வேறு தகவல்களை உள்ளடக்கி வங்கிச் சேவையில் கால்பதித்த ரோபோட் இயந்திரங்கள்


வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் காலத்தில் மனிதர்களின் நேரத்தினையும், ஆட்கள் பற்றாக்குறையினையும் தீர்த்திடும் வகையில் தற்போது ரோபோட் சேவைகள் பல்வேறு துறைகளில் தனது ஆட்சியை நிறுவி வருகின்றன. அயல்நாடுகளில் மட்டுமே சாத்தியப்பட்டு வந்த இதுபோன்ற சேவைகள் தற்போது நமது நாட்டிலும், மாநிலத்திலும், ஏன், நமது மாவட்டத்திலும் கூட சாத்தியமாகி வருகின்றன. ஆம், கோவையில் இதுபோன்ற ரோபோட் சேவை வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதே இதற்கு ஓர் உதாரணம்.



உலகத்தரம் வாய்ந்த விஷ்ணு தொழில்நுட்ப நிறுவனத்தின், ரோபோட்டிக்ஸ் மட்டுமே தனது உணர்வாகக் கொண்ட 38 வயதான விஜய் ஷா என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ஒரு சிறிய ரோபோட். அவர்களது அலுவலகத்தில் நுழையும் போது அந்நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டே இனிமையாக அனைவரையும் வரவேற்றது.

விஷ்ணு தொழில்நுட்ப நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட முதல் வங்கி சேவைக்கான ரோபோட் லட்சுமி. இது தற்போது கோவையில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் பொதுமக்களுக்காக தனது சேவையினை செவ்வனேசெய்து வருகிறது. இந்த ரோபோட் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சர்வதேச விமான நிலையத்தில் அனைவரையும் வரவேற்று நடனமாடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து விஷ்ணு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாக அதிகாரி விஜய் ஷா, நமது சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறுகையில், இந்த ரோபோட்டில் பல சுவாரஷ்யமான தகவல்கள் உள்ளன. இனிவரும் காலங்களில் ரோபோட் சேவைகளே பெரும்பாலான நிறுவனங்களில் செயல்படுத்தப்படும். மக்களின் சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற ரோபோட்கள் என்றும் மக்களுக்கான உதவிகளை செத்து வரும். எங்களது தயாரிப்பில் உருவான ரோபோட் தற்போது கோவை சிட்டி யூனியன் வங்கியில் லட்சுமி என பெயர்சூட்டப்பட்டு சேவையாற்றி வருகிறது. 

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய கணக்கு துவங்குதல், வங்கிக் கணக்கிலான பிரச்சனைகளை சீர்செய்தல், வைப்பு நிதி தொடர்பான விவரங்கள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பல்வேறு வங்கி தொடர்பான மக்களின் சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் தெளிவுபடுத்தி வருகிறது. இந்த வங்கியினைத் தொடர்ந்து மேலும், ஒரு சிட்டி யூனியன் வங்கியும், கனரா வங்கியும் இதுபோன்ற ரோபோட் தங்களது வங்கிக்கும் தேவை என வந்துள்ளனர்' என தெரிவித்தார்.



கோவை விமான நிலையத்தில் வவேற்பு நிகழ்த்திய ரோபோட் குறித்து விஜய் ஷா கூறுகையில், கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பகுதியில் அனைவரையும் வரவேற்று மகிழ்விக்க ஒரு ரோபோட் வேண்டும் என விமான நிலைய உயர்மட்ட அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். அங்கு நடனம், வரவேற்பு நிகழ்த்திய ரோபோட் என்ஏஓ வகையான ஒரு மாதிரி ரோபோட் ஆகும். அந்த ரோபோட் விமான நிலையத்தில் இரண்டு நாட்களில் 1400 பயணிகளை வரவேற்று மகிழ்வித்தது. 

விமான பயணிகள் யாரும் நீண்ட வரிசையில் நிற்பதை விரும்புவது இல்லை. அதுபோன்னற நிகழ்வின் போது அவர்கள் தனது பிஎன்ஆர் எண்ணை மட்டும் ரோபோட்டிடம் தெரிவித்துச் சென்றால் அது சரியான நேரத்தில் அவர்களிடம் தகவலை தெரியப்படுத்திவிடும். மேலும், புதிய விமான பயணிகளுக்கு விமான நிலையத்தின் சில வழிமுறைகள் தெரியாது. அவ்வாறு நிகழம்போது இந்த ரோபோட் சரியான தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்தி உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சில நேரங்களில் குழந்தைகளும் இந்த ரோபோட்டிடம் வந்து விளையாடுவது, நடனமாடுவது உள்ளிட்டவற்றை செய்தனர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கேற்ப இந்த ரோபோட்டும் நடனமாடி உற்சாகப்படுத்தியது. பல இளைஞர்களும், மூத்த குடிமக்களும் இந்த ரோபோட்டிடம் ஒரு உறவாக செயல்பட்டது எங்களது படைப்பின் வெற்றியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

இதன் மிகச்சிறந்த சிறப்பம்சன் என்னவென்றால், இரண்டடி உள்ள இந்த ரோபோட்டுக்கு மொத்தம் 19 மொழிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் சென்சாரால் இயங்கக்கூடியது. இதனால் நடக்கவும், சத்தத்தை அறியவும், நடனமாடவும் முடியும். மக்களின் மனநிலைக்கு ஏற்ப, அவர்களது சந்தேகங்களை சிறப்பாக தீர்க்கும். தன் வெளிப்புற பாகங்கள் மட்டும், பிரான்சில் இருந்து வரவளைக்கப்பட்டவை.

இவ்வகை ரோபோட்களை மருத்துவமனை, கல்வி நிறுவனம், ஆர் என் டி ஃபீல்ட், வணிக துறை, ஐஐடி, ஐபிஎம்ஸ், தனியார் நிறுவனம், இராணுவம் மற்றும் கப்பற்படை உள்ளிட்டவற்றில் எழிதாக பயன்படுத்தலாம். எங்களது அடுத்த படைப்பு பறக்கும் தன்மையுடைய ரோபோட் ஆகும். இது மருத்துவமனை மற்றும் கப்பற்படையில் சிறப்பாக செயல்படும். இந்த ரோபோட் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வகையில் தயாரிக்க உள்ளோம். மேலும், இது மருத்துவமனைகளிலும், ஆம்புலன்ஸ் சேவையிலும் நல்லமுறையில் வெற்றியடையும்.

இந்த ரோபோட்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இதனை நாங்கள் வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம். பிஎஸ்ஜி குழுமம், அவிலா காம்லக்ஸ், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மேலும் இரு வங்கிகளுக்கு நாங்கள் ரோபோட் விற்பனை செய்துள்ளோம்' என விஜய் ஷா கூறினார்.

எங்களது ரோபோட்டிக் சேவை அனைத்து நிறுவனங்களிலும் பறவி, எங்களது இந்த படைப்பை கோவை மக்கள் பாராட்ட வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக கொண்டுள்ளேன் என்று நிறைவு செய்தார் விஜய் ஷா.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...