கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவளிக்க க்யூ ஆர் கோடுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

கோவை மாநகரின் காந்திபுரம், டவுன்ஹால், ரயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீட் விலக்கு நம் இலக்கு, பேன் நீட் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள் என சுவரொட்டியில் க்யூ ஆர் கோடும் அச்சிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு உட்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகரின் காந்திபுரம், டவுன்ஹால், ரயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீட் விலக்கு நம் இலக்கு, பேன் நீட் என்றும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த சுவரொட்டியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள் என க்யூ ஆர் கோடும் அச்சிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...