முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்கள் - சிறைபிடித்த காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய கனரக வாகனங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் லாரிகள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டன.


 திருப்பூர்: உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முறைகேடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சி உட்பட்ட துணை பாறை அருகில் சீத்தாமடை குட்டை உள்ளது. முறையாக அனுமதி பெறாமல் இந்த குட்டையில் இருந்து கடந்த சில நாட்களாக டிப்பர் லாரிகள் மூலமாக கிராவல் மண்ணை அள்ளிச் சென்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் சூழல் உருவானது. மேலும் வனப்பகுதியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குட்டையில் மண் அள்ளப்படுவதால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மண்ணை அள்ளுவதற்காக வந்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் இது குறித்த தகவல் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மற்றும் அமராவதி போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் இனிமேற்கொண்டு கிராவல் மண்ணை எடுக்கக்கூடாது என்றும், தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கிராவல் மண்ணை எடுக்க வந்த லாரிகள் திரும்பிச் சென்றன. விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...