பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியான வன்முறையும், தலித் விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்

கோவையில் பாரூக் என்ற திராவிட கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்களும் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

கோவையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக விமான நிலையத்தில் சந்தித்தாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றியது போல நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பணபட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்கள் நல கூட்டணியானது கருத்து வேறுபாடுகளுடன் அதில் உள்ள கட்சிகள்  ஒன்றாக இருந்து வந்ததாகவும் தேர்தலில் போட்டியிடாத  சி.பி.ஐ , விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் பாரூக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என கூறியவர் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் குற்றச்சாட்டினார். 5 மாநில தேர்தல் காங்கிரஸ் தோல்வி என்றோ, பா.ஜ.கவிற்கு வெற்றி என்றோ எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோவாவி அதிக இடங்களை காங்கரஸ் வெற்றி பெற்றிருந்தும்  குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை பா.ஜ.க அமைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு  தமிழக அரசு நிதி ஓதுக்கி இருப்பது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்த அவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...