ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை மற்றும்‌ செவிவியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஜி.கே.என்‌. எம்‌‌. மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உலகம்‌ முழுவதும்‌ இன்று பக்கவாத தினம்‌ கடைபிடிக்கப்படும்‌ நிலையில்‌, ஜி.கே.என்‌.எம்‌. மருத்துவமனை மற்றும்‌ செவிலியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ்‌ கோர்ஸ்‌ பகுதியில்‌ நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில்‌ ஜி.கே.என்‌.எம்‌. செவிலியர்‌ பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள்‌ நாடக வடிவில்‌ நடித்து காண்பித்தும்‌ மற்றும்‌ இந்நோய்‌ குறித்த தகவல்கள்‌ அடங்கிய பதாகைகளை கைகளில்‌ ஏந்தியும்‌ பொதுமக்களிடையே பக்கவாதம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல்‌, ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம்‌ மற்றும்‌ வாழ்க்கை முறையினை கடைபிடித்தல்‌, பக்கவாத நோய் ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள்‌ உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில்‌ தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்‌ இந்த பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ வாயிலாக பயன்‌ பெற்றனர்‌.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...