பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் - ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை சம்பவத்தை மறைத்து முரணான தகவலை தெரிவிக்கும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் முன்பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையில் செயல்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் முன்பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையில் பொதுமக்கள் அமைதி ஊரு விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கப்படுவதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இது தொடர்பாக நிகழ்விடத்திலேயே கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்புகளில் முதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் சமம்பவதில் ஈடுபட்டதாகவும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்று விட்டதாகவும் செய்தி வெளியிட்டு பின்பு மீண்டும் ஒருவர் மட்டும் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வீசி சேதம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அவசரமாக நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.



உண்மையில் ஒரே ஒரு நபர் மட்டுமே எதிர்ப்புறம் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி அது ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்பில் பட்டு கீழே விழுகிறது. அந்த நபர் உள்ளே செல்ல முயலவில்லை அதற்குள்ளாக தமிழ்நாடு அரசின் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் இதுபோன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு ஊர் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கப்படுவதோடு சட்டபடி நடவடிக்கைக்கு உட்பட்டதே என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...