ராபி பருவ பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2023-24 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களைக் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களைக் விவசாயிகள் காப்பீடு செய்யலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) ராபி பருவத்திற்கான அறிவிக்கை பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது ராபி பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட (சோளம், கொண்டை கடலை, மக்காச்சோளம் III, நெல் III) பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிர்கள் ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்படும் சோள பயிரினை 15.12.2023 தேதிக்குள்ளும், கொண்டை கடலை மற்றும் மக்காச் சோளப் பயிரினை 30.11.2023 தேதிக்குள்ளும் நெல்பயிரினை 31.01.2024 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பயிர்காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.144,75, கொண்டை கடலை ஏக்கருக்கு ரூ.210/-, மக்காச் சோளபயிருக்கு ஏக்கருக்கு ரூ.519.75 மற்றும் நெற்பயிருக்கு 4 ஏக்கருக்கு ரூ.562.50 செலுத்தினால் போதுமானது.

எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன்பெறா விவசாயிகள் பொதுசேவை மையங்களிலோ (இ-சேவைமையங்கள்) தேசிய பயிர்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfy.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் இஅடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார்அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-மையங்கள்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர்காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவிஇயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவிவேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு விவசாய பெருங்குடி மக்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...