உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் - 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


திருப்பூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 28 விவசாயிகள் 141 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர். கொப்பரை ஏலத்தில் 28 விவசாயிகள் 141 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.



இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.80.99 முதல் ரூ.86.49 க்கும் இரண்டாம் தர கொப்பரை ரூ.73.99 முதல் ரூ.79.99 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...