இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவுரை நிறை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் வேல்முருகன் 42. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜு, புவனேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்செல்வன், தாமரைச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் வேல்முருகன் ராஜூவும் மொபைலில் பேசிக்கொண்டபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது, ராஜு உட்பட மேற்கூறிய நான்கு பேரும் சேர்ந்து, கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...