கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒருவர் கைது

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ய இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்றுகோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் கோவில்பாளையம் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போதுகஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனாதிநாயக் மகன் துஸ்மந்த் நாயக்(31) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.425 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 516 நபர்கள் மீது 389 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 682.811 கிலோ கிராம் எடையுள்ளகஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...