ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), 18.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வருகின்ற 31.10.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்கனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 31.10.2023 அன்று திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...