அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா - கோவையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் கட்சிக்கொடி, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க, எடப்பாடியார் வாழ்க என கோசங்களை எழுப்பினர்.



மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சின்னவேடம்பட்டி சுப்பையன், ஐ.டி.விங் மண்டல இணை செயலாளர் விக்னேஷ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு கே.பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, அண்ணா தொழில்சங்க பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஐ.டி.ஐ ஜெயராஜ், ராஜகோபால், செல்வராஜ், நந்தகோபால், சண்முகம், மோகன்ராஜ், திரு, ரங்கநாதன், சி.டி.சி செல்வம், ராஜூ, விக்னேஷ், சென்னியப்பன், சிவமூர்த்தி, அண்ணாமலை, சர்க்கரையப்பன் மற்றும் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...