பரூக் கொலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒருவர் சரண்


கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒருவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார் 



கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமீது என்பவரது மகன் பரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த இவருக்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி வெட்டி படுகொலை செய்தனர்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் நடந்த அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும், ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மீரன்குட்டி என்பவரது மகன் அன்சர்த் (31) என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாரூக் கொலை தொடர்பாக சரணடைந்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...