கோவையில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் கனவு நிகழ்ச்சியில் "ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா, சொற்பொழிவாளர், கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்காவது நிகழ்வாக வரும் 19.10.2023 அன்று காலை 09.00 மணிக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப (Dr. SNS College of Technology) கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஈதல் இசைபட வாழ்தல் என்னும் பொருண்மையில் எழுத்தாளர். திருமிகு நந்தலாலா, சொற்பொழிவாளர், அவர்கள் கருத்துகளை எடுத்துரைக்க வருகைதரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம். தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...