தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆய்வு கூட்டம் - ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


திருப்பூர்: கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் த.பானுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) என். சிவகுருநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்தும் மற்றும் 16 கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் கூறும்போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால் கிராமப்புற பகுதியில் பல இடங்களில் குடிநீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோன்று கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தெய்வசிகாமணி, பழனிசாமி, கீதாலட்சுமி, கலைச்செல்வி, சுப்பிரியா உள்ளிட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...