தாராபுரம் அருகே சூதாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை - குளியலறையில் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் பணம் இழந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் குளியல் அறையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் ஒருவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கவின்குமார் (23). இவர் பொறியியல் பட்ட படிப்பை முடித்து விட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளையாடி வருவதாக கூறப்படுகிறது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் விளையாட ரூ.3 லட்சம் கடன் வாங்கி பந்தயம் கட்டி விளையாடி வந்ததால் பணத்தை பந்தயத்தில் இழந்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக பணத்தை இழந்த சோகத்தில் மனமுடைந்து சோகமாக இருந்து வந்துள்ளார்.



சோகத்தில் மனமுடைந்த கவின்குமார் நேற்றைய முன்தினம் இரவு குளியலறைக்கு சென்ற கவின்குமார் குளியல் அறை முற்றத்தில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவருடைய தம்பி, அண்ணன் கவின்குமார் நீண்ட நேரமாக வராத போது குளியலறை சென்று பார்த்தார். அப்போது தூக்கில் தொங்கியதை கண்ட தம்பி சத்தம் போட்டுள்ளார். அருகாமையில் உள்ளவர்கள் உடனடியாக கவின்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து கவின்குமாரை பரிசோதனை செய்தனர்.

ஏற்கனவே கவின்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாராபுரம் பகுதியில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...