சீரான மின்சாரம் கேட்டு ஜல்லிப்பட்டி ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளை சார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மனுவாக கொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளைசார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுக்கப்பட்டது. ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகிறது.



தொடர்ச்சியாக தரமற்ற மின்விநியோகத்தால் லோவேல்டேஜில் மின்சாரம் வருவதால் பேன் மிக்சி கிரைண்டர் அயர்ன்பாக்ஸ் உட்பட வீட்டுமின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல்நிலைக்கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சீரான மின்சாரம் வழங்கிடவும் மேல்நிலைகம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி இந்தியஜனநாயக வாலிபர்சங்ம் சார்பில் பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துபெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசப்பட்டது.



உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் DYFI உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, அஜித்குமார், சுரேஸ், சின்னகருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உட்பட கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...