தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் பைப் திறப்பு விழா

தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வார்டுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வார்டுகளுக்கும் பைப்லைன் மோட்டார் வசதியை இல்லை.

இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் வினையாக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை மருத்துவர் டாக்டர் சத்யராஜ், செயலாளர் பசுபதி மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி, அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், அகரம், சீனிவாசன், பாபு, பாலச்சந்தர், விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...