தாராபுரம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரத்தில் நடைபெற்ற  பூத் கமிட்டி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெறுவது மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...