மாநகராட்சி பணிகள் குறித்து மேற்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 8-வது வார்டுக்குட்பட்ட தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேளமரங்களை பார்வையிட்டு அதனை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுலர்களுக்கு உத்தரவிட்டார்.



தொடர்ந்து, மேற்கு மண்டல 5-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கன்னிகா நகர் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆய்வு செய்தார். 



இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மனித கழிவுகள் மற்றும் சமயற்கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயுக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...