ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக முதல்வரிடம் தங்களின் 7 அம்ச கோரிக்கையை ஆவணம் செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மனு அளித்தனர்.


கோவை: தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஆவணம் செய்யுமாறு ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.



"குடிசை மற்றும் குறு மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும், தாழ்வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12KW- 20ரூ, 0-50KW- 35ரூ, 50-112 KW- 35ரூ, 112-150KW- 350ரூ என்பது தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பு கட்டணம் தற்பொழுது 562 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் முந்தைய கட்டணமான 350 ரூபாய்க்கே குறைக்கப்பட வேண்டும்.

தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும். அதே சமயம் உயர் மின்னழுத்த பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் நேரம் நான்கு மணி நேரமாகவும், பீக் அவர் கட்டணம் 20% ஆகவும் குறைக்கப்பட வேண்டும்.

வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1% இருக்க வேண்டும், சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும், 112-150KW உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே முதல்வர் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.



இந்த ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் அமைப்புகள் முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும் கோவையில் கதவடைப்பு போராடம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...