விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் உறுதி

உழவர் கடன் அட்டைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களின் சேமிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது. விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...