கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் பொதுமக்கள் 33 மனுக்கள் அளிப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமாரிடம் 33 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.


கோவை: பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா தலைமையில்‌ இன்று (19.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.ச.செல்வசுரபி ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 33 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 1 மனுவும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 9 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 3 மனுக்களும்‌ ஆகமொத்தம்‌ 33 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ், உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) செந்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ செந்தில்குமரன்‌, மகேஷ்கனகராஜ்‌, சந்தியா, நூர்‌அகமது(பொ), திரு.ஜூ.பிரேம்‌ஆனந்த்‌, மாமன்ற செயலாளா்‌ மாணிக்கம்‌, செயற்பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...