சுங்கம் பணிமனை கிளை மேலாலரைக் கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனை முன்பு போராட்டம்


கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரை கண்டித்தும், செம்மேடு பகுதியில் இயக்கப்பட்ட பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தக்கியவர்களை கைது செய்யக் கோரியும், பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனை முன்பாக  50 க்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்று முந்தினம், கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் இருந்து  காந்திபுரம்  நோக்கி வந்து  அரசு பேருந்தை,  செம்மேடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மறித்து உள்ளனர். குடி போதையில் இருந்த காரணத்தால், பேருந்தை முன்னேரி செல்ல வழிவிடாமல் தகராரில் ஈடுபட்டதுடன், ஓட்டுநர் ராஜு மற்றும் நடத்துனர் செந்திலை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த ராஜு, விசாரணைக்காக காவல்நிலையம் செல்ல வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் , கிளை மேலாளர் அனுமதி அளிக்க மறுத்து பேருந்தை இயக்க வற்புறுத்தி உள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்தத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  50 க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரின் அலட்சிய போக்கை கண்டித்தும், செம்மேடு  அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக சுங்கம் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...