பொள்ளாச்சியில் ரூ.43.46 லட்சம் மதிப்பில் பாசன கால்வாய் தூர்வாரும் பணிகள் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் நடைபெறும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத்தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்த நாயக்கனூர், அங்க லக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக்கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோள பாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலை யாண்டிபட்டிணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம்பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப்பிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நேற்று பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நடக்கும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மாவட்ட கலெக்டருடன் ஆய்வின்போது வடடார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...