அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பேட்டி.


கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட இயக்கத்தினர் மனு அளித்தனர்.

சேலம் மற்றும் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் அத்திக்கடவு வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

 அம்மனுவில் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தேசிய பேரிடராக கருதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற உறுதிபூண்டிருந்ததாகவும், இது தொடர்பாக கோவை வந்த பிரதமர் மோடியிடமும் தாம் வலியுறித்தியிருந்ததாகவும் தெரிவித்தார். 

அவினாசி அத்திக்கடவு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார். இதை தொடர்ந்து சேலத்திற்கு கார் மூலம் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...