ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கோவை: காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.



கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கடந்த 15 நாட்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தினபுரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட GPM நகர், பூம்புகார் நகர், சேவா நகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேற்றி உள்ளது.

நேற்று பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு காலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க திருடர்கள் முயற்சித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும்பளவில் அச்சம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர். இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கரும்புக்கடை பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பாக ஒரே சமயத்தில் இருசக்கர வாகனங்கள் திருடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...