தாராபுரத்தில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையிடம் ஆசை வார்த்தை கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட தையல் தொழிலாளியின் செயல் அப்பகுதி மக்களை எரிச்சலடைய வைக்கும் வகையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தையல் தொழிலாளி. இவரது மனைவியின் தங்கை 17 வயது சிறுமி ஆவார்.

சிறுமி அவ்வப்போது தனது அக்காள் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது தையல் தொழிலாளி தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தனது அக்காள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விசாரனை மேற்கொண்டு தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...