பாஜக ஆட்சி வெளியேறக்கோரி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசு ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.



அனைத்து பொருட்களின் விலை உயர்வு, அரிசி, எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஜி எஸ் டி வரி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, பண மதிப்பிழப்பு, ரயில்வே உள்ளிட்ட பொது நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாதது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழர்கள் காட்டும் ஆர்வத்தை ஆணவம் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, மணிப்பூர் கலவரம், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் என பல்வேறு விஷயங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது.



இந்த மறியல் போராட்டத்தில் ரேஷன் திட்டத்திற்காக 50,000 மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஒன்றிய அரசு உருவாக்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய மோடி அரசு வன்மத்துடன் தாக்குதல் தொடுப்பதாகவும், 12 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு 11.86 கோடியை ஒதுக்கும் ஒன்றிய அரசு சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு 198.83 கோடியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாகவும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.



கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சில தொழில்துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...