தார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு..!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் உள்ள தார் தயாரிக்கும் தொழிற்சாலையால் தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகுவதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



கோவை: தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுக்காற்றை சுவாசிக்கும் கால்நடைகளுக்கு கூட மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் மாசால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த தார் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் அதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதாகவும் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுவதாகவும் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...