சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பயன்பாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை விண்ணைத் தொட்டிருக்கும் நிலையில், சுங்கச்சாவடி கட்டணமும் ஒன்றிய அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை ஒரு பக்கம் பொது மக்களின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் நிலையில், சுங்க சாவடி கட்டண உயர்வும் இத்துடன் கைகோர்த்து இருக்கின்றது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அவரிவிதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சுங்கச்சாவடி முன் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.



இந்த நிலையிலே தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொச்சின் சாலையில் உள்ள சுங்கச்சாவடி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தரைவழி வர்த்தகத்தை மையப்படுத்திய அனைத்து பொருட்களின் விலையும் அபரிவிதமாக உயரும் என குற்றம் சாட்டினர். அதே சமயம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதித்து இருக்கின்ற நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டமாக தெரிவித்தனர். எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முறையான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Ljj ஜெகன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k சந்துரு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேலு,மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை, மாநில தொழிற்சங்க துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவை ஒருகிணைந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, தொழிற்சங்கம் உளளிட்ட அணைத்து நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...