மேட்டுக்கடை - குண்டடம் இடையே 4 வழிச்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



திருப்பூர்: மேட்டுக்கடை முதல் குண்டடம் வரையிலான இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.



நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் -தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக பல்வுறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை 53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.



திருப்பூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் (SH-174A) மொத்த நீளம் 29.40 கி.மீ இருவழிச்சாலையாகும்.



இச்சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 13.00 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.93.90 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...