உடுமலையில் காவல்துறையை கண்டித்து டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை!

உடுமலை அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: உடுமலை அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் டி எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தும்பலப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் விநாயகர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.



இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு தரப்பினருக்கு மட்டும் ஏழு பேர் கைது செய்யபட்டதை கண்டித்து தும்பலபட்டி ஊராட்சி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாகநடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்கள் தரப்பில் கொடுத்தமனுவில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் உறுதிஅளிக்கபட்டதால் ஓரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டம் தற்காலிமாக முடிவுக்கு வந்தது.

இருப்பினும் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடுமலையில் காவல்துறையை கண்டித்து டிஎஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...