கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் மையம் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு 37.52 கோடி கடன் உதவிகள் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார்.



கோவை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம் பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குரு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உட்பட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கடன் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு 37.52 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார்.



இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம் பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குரு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உட்பட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கடன் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு 37.52 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் முத்துசாமி,



டார்கெட் முடித்து கூடுதலாக போய்விட்டார்கள். எனவே அடுத்த ஆண்டு டார்கெட் இன்னும் அதிகமாக கூடும் என நினைக்கிறேன். எங்கிருந்து வந்தாலும் அம்மக்கள் கோவைக்கு வருகை புரிந்து விட்டு தான் செல்வார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் இருபவர்களை மட்டும் பாராமல் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும்.

ஒரு ஊரில் யாரேனும் இருவரை நாம் வளர்த்து விட்டால் அவர்களை கைனடாக வைத்து கொண்டு அனைவரும் செயல்படுவர். தற்போது நாம் எட்டிய இலக்கு மட்டுமல்லாமல் தொழில்சாலை வாசனையே இல்லாத இடத்தில் இருந்து நாம் எத்தனை பேரை கொண்டு வந்துள்ளோம் என்பதை கணக்கிட்டு அதனை பரவலாக்குகின்ற நிலையை உருவாக்க வேண்டும். முதல்வர் கோவைக்கு வருகை தர உள்ளார். அப்போது இவற்றை பற்றி எல்லாம் விவரமாக பேச இருக்கிறார்.

நம் மாவட்டத்திற்கு முதல்வர் வரும்போது அனைத்து துறைகளும் தயாராக வேண்டும். ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்டதை சிறப்பாக செய்திருக்க வேண்டும். புதிதாக பல விசயங்களை நாம் செய்ய வேண்டும். தொழிற்துறை மட்டுமின்றி அடிப்படையான தேவைகளையும் நாம் முதல்வரிடத்தில் கடிதமாக கொடுத்திருக்கிறோம். நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அதனை நான் கவனிப்பதை விட வெளியில் இருப்பவர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். எனவே அவர்கள் கூறுகின்றன கருத்துக்கள் இன்னும் நமக்கு பயனுள்ளதாக அமையும்.

வேலை என்று வரும் போது இந்த துறை மட்டும் தான் நமக்கு என்றில்லாமல் நம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை நாம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இது போன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிற போது இதை விட உயந்திருக்க கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். நொடிந்து போகும் சூழலில் இருக்க கூடிய தொழில்களுக்கும் நாம் தனியாக ஆய்வு மேற்கொண்டு அவர்களையும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...