உடுமலையில் ஸ்ரீமாகாளியம்மன் செல்வவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



திருப்பூர்: ஸ்ரீ மாகாளியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாவிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டராப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



முன்னதாக அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகெள பூஜை, நான்காம் கால பூஜை, மகாதீபாராதனை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.



பின்னர் ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு பல வகை அபிஷேகம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.



கும்பாபிஷேக பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...