வால்பாறையில் மைதானத்தில் ஆட்டம் போட்ட காட்டு யானைகள்..!! வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறையில் முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில், காட்டு யானைகள் அங்கும், இங்கும் ஆட்டம் போட்டதை பொதுமக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.



கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டுயானைகள், மைதானத்தில் உலா வந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அடந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டிய ஆற்றங்கரையோரம், தேயிலை தோட்டம் பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று மாலை முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டு யானைகள் மைதானத்தில் இறங்கி விளையாடின. இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.



காட்டு யானைகள் மைதானத்தில் அங்கும் இங்கும் நடந்து செல்லும் காட்சி அழகாக இருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறிது நேரத்தில் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...