தாராபுரத்தில் ரூ.13.88 கோடி மதிப்பில் 33 திட்டங்கள் தொடக்கம்: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்பு..!

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ரூ.6.64 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் 26 திட்டப்பணிகள், ராமமூர்த்தி நகரில் பகுதிநேர நியாயவிலைக்கடை, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பட்டியில் பகுதி நேர் நியாயவிலைக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர்கள் சாமிநாதனும், கயல்விழியும் பங்கேற்று திறந்து வைத்தனர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்து, திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்.



கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ரூ.6.64 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் 26 திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ராமமூர்த்தி நகரில் பகுதிநேர நியாயவிலைக்கடையை திறந்து வைத்தும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பட்டியில் பகுதி நேர் நியாயவிலைக்கடையை திறந்து வைத்தும், கோவிந்தாபுரத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் கோவிந்தாபுரம் முதல் குண்டடம் சாலை வரை சாலை மேம்பாட்டுப் பணியினையும் என மொத்தம் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி மற்றும் திறந்து வைக்கப்பட்டது.



முன்னதாக, கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து, 03 விவசாயிகளுக்கு ரூ.84.000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடனுதவியையும், 07 விவசாயிகளுக்கு ரூ.7.25 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க் கடனுதவியையும், 01 மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடனுதவியையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கி, முகாமில் கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்றாக தேர்வு செய்யப்பட்ட 03 கன்றுகளுக்கும், விவசாயிகளுக்கு சிறந்த பால் 03 உற்பத்தியாளர்களுக்கான பரிசு மற்றும் நற்சான்றிதழ்களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...