கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் 3 கூட்டங்களில் பங்கேற்க தடை… மேயர் கல்பனா அதிரடி உத்தரவு

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரிய அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மேயர் கல்பனாவை விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்தார். இதனால் அடுத்த மூன்று கூட்டங்களில் அவர் பங்கேற்க மேயர் தடை விதித்து உத்தரவிட்டார்.


கோவை: மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது அதிகம். எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்று மாநகராட்சி வுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் அடுத்த வரும் மூன்று கூட்டங்களில் பங்கேற்க மேயர் கல்பனா தடை விதித்தார்.

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது அதிகம். எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசியதாவது:- கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கினீர்களோ அதே தொகை தான் இப்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அதி.மு.க. கவுன்சிலர் பிரகாகரன் மேயர் பதிலை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்யும் நோக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.



இதனையடுத்து மேயர் கல்பனா, அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தாக கூறி அடுத்து நடைபெற உள்ள 3 மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.



முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், கூட்ட அரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார். மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வரும் வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...