தடாகம் அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு!

தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, பெண்களுக்கு சேலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.



கோவை: தடாகம் அருகே பெரியநாயக்கன்பாளையம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சேலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கோவை தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பேசினார். கிளை செயலாளர் சபரீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆனைகட்டி மதன், எம்.ஆர்.டி.செல்வராஜ், கலைவாணி முத்துக்குமார், சிவகுமார், கே.சி.கே.சம்பத்குமார், சோமையம்பாளையம் ஆனந்தக்குமார், நஞ்சுண்டம்புரம் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கதிர்வேல் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சிருடைகள் மற்றும் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.



இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஐ.டி.மாவட்ட ஒருங்கிணைபாளர் ஹரீஸ், நிர்வாகிகள் டி.டி.எஸ்.மூர்த்தி, டி.வி.செல்வராஜ், டி.டி.கே.கதிர்வேல், வீரபாண்டி ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி, மாணிக்கம் மயில்சாமி, கனகராஜ், பி.டி.கோபால்சாமி, டி.கே.டி.சிவகுமார், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், தடாகம் கிளை செயலாளர்கள் பரமேஸ்வரன், கந்தசாமி, மல்லிகார்ஜூனன், கன்னிமுத்து, சடகுட்டி, குமார் வேலுமணி, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், பன்னிமடை, சோமையம்பாளையம், 24.வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் கிளை செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் இளைஞர் அணியை சேர்ந்த ஜெகன் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...